close
Choose your channels

ஹன்சிகா வீட்டில் திருமண களை: உதய்பூர் அரண்மனையை வாடகைக்கு எடுத்ததாக தகவல்!

Saturday, March 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, அதன் பின்னர் ’எங்கேயும் காதல்’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ‘மான் கராத்தே’, ‘சிங்கம் 2’, ‘சேட்டை’, ‘வேலாயுதம்’ ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் சிம்புவுடன் ‘மஹா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் என்ற இடத்தில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்திற்காக உதய்பூர் அரண்மனையையே ஹன்சிகாவின் குடும்பத்தினர் வாடகை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த அரண்மனையில் இரண்டு நாட்கள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகவும் ஹன்சிகாவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment