'ஜாக்பாட்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,August 09 2019]

இயக்குனர் கல்யாண் இயக்கிய 'குலேபகாவலி' படத்தை அடுத்து அவர் இயக்கிய 'ஜாக்பாட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜோதிகா நடித்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்த நிலையில் கல்யாண் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

கல்யாண் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கல்யாண் இயக்கிய 'குலேபகாவலி' படத்திலும் ஹன்சிகாதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், இதுவும் கல்யாணின் முந்தைய படங்கள் போலவே ஹாரர் காமெடி படம் என்றும் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது.