ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்யுடன் 'வேலாயுதம், 'புலி', சூர்யாவுடன் 'சிங்கம் 2', தனுஷூடன் 'மாப்பிளை', சிம்புவுடன் 'வாலு', என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

இந்த நிலையில் ஹன்சிகா 50 படத்தில் நடித்த நடிகை என்ற பெருமையை பெறவுள்ளார். அவர் இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் வரும் 9ஆம் தேதி அவருடைய 50வது பட அறிவிப்பு வெளியாகவுள்ளது. அன்றைய தினம் அவருடைய பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஹன்சிகா தனது சமூல வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா உள்பட ஒருசில நடிகைகளே 50 படங்களுக்கும் மேல் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் அரை சதம் போட்ட நடிகைகளின் பட்டியலில் தற்போது ஹன்சிகாவும் இணைந்துள்ளார். வரும் 9ஆம் தேதி ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அருண்விஜய்யின் 'தடம்' சென்சார் தகவல்கள்

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்பத்தை தந்த படம் அஜித்தின் 'என்னை அறிந்தால்' என்ற படம் தான்.

வருமான வரித்துறை அலுவலகராக மாறிய 'குப்பைத்தொட்டி' இளம்பெண்

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் குப்பைத்தொட்டியில் ஒரு அழகான பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டார்.

திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று வரை தலைவர்கள் கூறிவந்தனர்.

என் படத்தால் கவுதமி பெர்சனலாக பாதிக்கப்பட்டாரா? இயக்குனரின் கேள்வியால் பரபரப்பு

இயக்குனர் வாராகி இயக்கிய 'சிவா மனசில புஷ்பா' என்ற படத்தின் டைட்டில் மாற்றப்பட வேண்டும் என்ரு சென்சார் போர்டு கூறியதை அடுத்து, இயக்குனர் வாராகி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இசையமைப்பாளர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.