ஹன்சிகாவுக்கு திருமணமா? புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாதது ஏன்?

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா, இந்த படத்தை தவிர வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் படத்தில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்பட்ட போதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் பல மாதங்கள் ஆகும்
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் வதந்திகள் பரவி வருகிறது
இந்த வதந்திக்கு ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது மகள் ஹன்சிகாவுக்கு 24 வயது மட்டுமே ஆகியிருப்பதாகவும், அவரது திருமணம் இப்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.