பாபிசிம்ஹாவின் 'கோ 2'வில் ஹன்சிகா?

  • IndiaGlitz, [Saturday,September 26 2015]

'ஜிகர்தண்டா' வெற்றிக்கு பின்னர் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவுக்கு கோலிவுட்டில் பல வாய்ப்புகள் குவிந்துள்ள நிலையில், அவர் நடித்த 'கோ 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோ பாடல் ஒன்று நேற்று வெளியானது.

இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸ் இசையமைத்த "கண்ணம்மா" என்று தொடங்கும் இந்த பாடலை பாலிவுட்டின் பிரபல பாடகர்களான விஷால் தத்லானி மற்றும் சலீம் மெர்ச்சண்ட் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை பிரபல நடிகை ஹன்சிகா வெளியிட்டார். இந்த பாடலை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், 'கோ 2' குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் இணையதளத்தில் தற்போது பிரபலமாகி வருகிறது.

அறிமுக இயக்குனர் சரத் இயக்கியுள்ள இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்துள்ளார். பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிகில் கல்ராணி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தல அஜீத்தின் அட்டகாசமான 'கெத்து' பாடல்?

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த படத்தின் டைட்டில்...

சீனா, ஜப்பானில் ரிலீஸ் ஆகின்றதா 'புலி'?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

'புலி' வியாபாரம் குறித்து புதிய சுவாரஸ்ய தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய 'புலி' படத்தின் அனைத்து ஏரியாவின் உரிமைகளும் விற்பனையாகி கிட்டத்தட்ட தமிழகம்...

அமெரிக்கா, கனடாவில் 'புலி' செய்த புதிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறது....

'தனி ஒருவன்' ராஜாவுக்கு ஷங்கர் பாராட்டு

சமீபத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த படம் பாக்ஸ்..