முதல்முறையாக ஹன்சிகாவுடன் இணைந்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,April 29 2016]
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தாலும் மற்ற பிரபல நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஹன்சிகா தயங்கியதில்லை என்பது 'சிங்கம் 2' மற்றும் 'அரண்மனை 2' போன்ற படங்களில் இருந்து தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல நடிகையுடன் ஹன்சிகா இணைந்துள்ளார். அவர்தான் தமன்னா.

ஹன்சிகாவும் தமன்னாவும் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை எனினும் முதல்முறையாக தற்போது ஒரு விளம்பர படத்திற்காக இணைந்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல டெக்ஸ்டைல் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடைபெற்ற படப்பிடிப்பின்போது இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹன்சிகா நடித்த 'மனிதன்' இன்று வெளியாகவுள்ள நிலையில் அவர் ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதேபோல் விஜய்சேதுபதியுடன் 'தர்மதுரை' படத்தில் நடித்துமுடித்துவிட்ட தமன்னா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி வரும் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.