close
Choose your channels

ஹன்சிகா, ஹன்சிகாவாகவே நடித்திருக்கும் படம் எது தெரியுமா?

Tuesday, March 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடித்துள்ள 'உயிரே உயிரே' படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஹன்சிகா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹன்சிகா, 'உயிரே உயிரே' படத்தின் முதன்முதலாக நான் நானாகவே நடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார்


இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'Ishq' படத்தின் ரீமேக் என்பதை உறுதி செய்த ஹன்சிகா, இந்த படத்தின் ஹீரோ சித்து, தன்னுடைய அதிகபட்ச உழைப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பழம்பெரும் நடிகை ஜெயப்ரதா தயாரித்துள்ள இந்த படத்தில் தான் அவரிடம் இருந்து நிறைய டிப்ஸ்களை எதிர்பார்த்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கொடுத்தது நிறைய காம்ப்ளிமெண்ட்ஸ்கள் மட்டுமே என்று கூறினார்.

சித்து, ஹன்சிகா, அஜய், ஆடுகளம் நரேன், சாயா சிங், ரோஹினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். அனூப் ரூபன்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment