ஹன்சிகா, ஹன்சிகாவாகவே நடித்திருக்கும் படம் எது தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 29 2016]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடித்துள்ள 'உயிரே உயிரே' படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஹன்சிகா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹன்சிகா, 'உயிரே உயிரே' படத்தின் முதன்முதலாக நான் நானாகவே நடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார்


இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'Ishq' படத்தின் ரீமேக் என்பதை உறுதி செய்த ஹன்சிகா, இந்த படத்தின் ஹீரோ சித்து, தன்னுடைய அதிகபட்ச உழைப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பழம்பெரும் நடிகை ஜெயப்ரதா தயாரித்துள்ள இந்த படத்தில் தான் அவரிடம் இருந்து நிறைய டிப்ஸ்களை எதிர்பார்த்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கொடுத்தது நிறைய காம்ப்ளிமெண்ட்ஸ்கள் மட்டுமே என்று கூறினார்.

சித்து, ஹன்சிகா, அஜய், ஆடுகளம் நரேன், சாயா சிங், ரோஹினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். அனூப் ரூபன்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

சூர்யாவின் '24' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்...

மலையாள படங்களையும் புரமோஷன் செய்யும் அஜித்-விஜய்

கோலிவுட் திரையுலகில் பல இளையதலைமுறை நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அஜித் அல்லது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ, வசனங்களையோ...

சூப்பர் ஸ்டாரின் 'கபாலி' டீசர் ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' ஆகிய இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...

63வது தேசிய விருதுகள்: முழு பட்டியல்

63வது தேசிய விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல் தமிழ் திரையுலகம் இந்த முறையும் பல முக்கிய விருதுகளை வென்றுள்ளது...

'இன்று நேற்று நாளை' 2ஆம் பாகத்தில் சிவகார்த்திகேயன்?

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட்டை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார்...