பாபாவை தூக்கில் போடுங்கள்.....! கடுப்பாகி டுவிட் போட்ட பிரபல நடிகை...!

சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள் என நடிகை காஜல் பசுபதி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகள் ஊடகங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து, சுஷில் ஹரி பள்ளியை நடத்தி வந்த பாபா சிவசங்கரும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், சில பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து காமக்கொடூரன் பாபா மற்றும் அவனுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியைகள் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததில், காசியாபாத் என்ற இடத்தில் இவனை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். நேற்றிரவு டெல்லியிலிருந்து, சென்னை அழைத்து வரப்பட்டான்.

இந்நிலையில் விருமாண்டி படத்தில் நடித்த நடிகர் சண்முகராஜா, பாபா-வுக்கு ஆதரவாக பேட்டி கொடுக்க, அவை சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால் இந்நடிகருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து நடிகை காஜல் பசுபதி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, பாபாவை தூக்கிலிட வேண்டும் என தெரிவித்திருந்தார். shame on you twitter என்பதை பதிவிட்டு, ரேபிஸ்ட் பாபாவை பற்றி ஒரு வீடியோ பதிவிடலாம் என பதிவிட்டேன். ஆனால் அது அப்லோட் ஆகவில்லை என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
 

More News

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன்: கமல்ஹாசன் அறிக்கை

கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளை புறக்கணித்து வந்தார்கள் என்றும், இன்று சூழல் மாறி மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள் என்றும்,

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா? ஹீரோயினியா நடிக்கலாமே?

தமிழ் சினிமாவின் அமுல்பேபி என்று கூறப்பட்ட நடிகர் அப்பாஸ், காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் விஐபி, பூச்சூடவா, ஜாலி, பூவேலி, ராஜா, படையப்பா, மலபார் போலீஸ் உள்ளிட்ட

அட்லி-ஷாருக்கான் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா? மாஸ் பாடல்கள் நிச்சயம்!

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை

பட்டமளிப்பு விழாவில் முக்கவசம் அணியாத 11,000 மாணவர்கள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

நஸ்ரியாவிடம் இப்படித்தான் காதலை சொன்னேன்… 7 வருடம் கழித்து வெளியான ஃபகத் சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் “நேரம்”, “ராஜா ராணி” போன்ற சில திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை நஸ்ரியா.