வெள்ளெலிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாங்காங்கில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த வெள்ளெலிகளிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் உறுதிச்செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி கடந்த 2 வருடங்களாக நாம் தவித்து வருகிறோம். முன்னதாக மனிதர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து சில விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஹாங்காங்கில் வெள்ளெலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்த ஆய்வுசெய்த ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததாகவும் அவற்றிடம் இருந்து மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். இதனால் 2,200க்கும் மேற்பட்ட வெள்ளெலிகள் ஹாங்காங்கில் அழிக்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout