அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு ரத்து: அப்போ தனியார் பள்ளிகள்?
- IndiaGlitz, [Wednesday,December 16 2020]
அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ரத்து என சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அரசால் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து என்று குறிப்பிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டுதேர்வு ரத்து என்ற தகவல் தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது