விஜய்சேதுபதி அலுவலகத்தில் நடந்த அரைமணி நேர படப்பிடிப்பு: என்ன படத்திற்காக தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் அரைமணிநேரம் திரைப்பட படப்பிடிப்பு ஒன்று நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. 

பிரபல இயக்குனர் சீனு ராமசாமியின் உதவியாளர் விஜயகுமார் என்பவர் இயக்கும் திரைப்படம் ’அழகிய கண்ணே’. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநர் விஜயகுமார் கூறிய போது ’இந்த படத்தில் நாயகன் உதவி இயக்குனர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும், அவர் ஒரு ஹீரோவிடம் கதை சொல்வது போன்ற காட்சியை படமாக்க பட வேண்டியது இருந்தது என்றும் இந்த இந்த காட்சிக்காக ஹீரோவை விஜய் சேதுபதி என நாங்கள் தேர்வு செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார். 

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய்சேதுபதியை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் இளம் இயக்குநர்களுக்கு உதவும் தன்மை உடையவர் என்பதால் இந்த காட்சிக்கு அவர் உடனடியாக ஒப்புக் கொண்டது மட்டுமன்றி தனது அலுவலகத்திலேயே இந்த படப்பிடிப்பு நடத்த அனுமதியும் கொடுத்தார் என்றும் தெரிவித்தார். 

விஜய் சேதுபதி அலுவலகத்தில் விஜய்சேதுபதி நடிகராகவும் ஹீரோ இயக்குனராகவும் நடித்த காட்சி அரைமணிநேரத்தில் படமாக்கப்பட்டது என்றும், இந்த காட்சி மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்த இந்த காட்சியை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்து செல்வராகவன் கூறிய ஆச்சரிய தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம்

நடிகருக்கு இணையா சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை… கிடைத்த பதில் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “பத்மாவதி“,

மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக கடந்த 21 ஆண்டுகளாக விளையாடிய நிலையில் சமீபத்தில் ஒப்பந்தம் பதிப்பிக்கப்படாததால் பார்சிலோனா அணியில்

தங்கம் வென்ற ஒரே நாளில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த ஆச்சரியம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்ற கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது பெரும்

சென்னை ரெங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை தொடர்கிறதா?

சென்னை ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் சென்னை மாநகராட்சித் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து தடை மேலும் தொடருமா? அல்லது கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்