கொரோனா தடுப்பூசிக்காக 50 ஆயிரம் சுறாக்கள் வேட்டை!!! கதிகலங்க வைக்கும் பின்னணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தடுப்பூசி என்பது குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு எந்த அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கணக்கிடுகின்றனர். அந்த வகையில் கொரோனா போன்ற பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைத் தயாரித்து அதை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டாலும் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதில் கடும் நெருக்கடி நிலவும் எனக் கூறப்படுகிறது. காரணம் கொரோனா தடுப்பூசியை அதிகளவு தயாரிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் அளவை குறைத்து அந்நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க வேண்டும் என்பதற்கு தடுப்பூசியில் அதிகளவு ஸ்குவாலீன் பயன்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது சில விலங்குகளில் காணப்படும் ஸ்குவாலீன் எனும் இயற்கைப் பொருள் தடுப்பூசியின் அளவை குறைக்கும் என மருத்துவ உலகம் நம்புகிறது. இந்தப் பொருளைப் பயன்படுத்தும்போது குறைந்த தடுப்பூசி மருந்தைக் கொண்டே அதிக மக்களைக் காப்பாற்ற முடியும். அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கும் அதிக ஸ்குவாலீன் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஸ்குவாலீன் என்பது சுறாக்களின் நுரையீரலில் இருப்பதால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளுக்காக 50 ஆயிரம் சுறாக்கள் கொல்லப்பட்டு உள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலைப் பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ந்தே போயிருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் இன்னும் அதிகளவு சுறாக்கள் கொல்லப்படலாம் எனவும் கூறுகின்றனர்.
காரணம் தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அதிக கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியாது எனவே சுறாக்களின் நுரையீரலில் காணப்படும் இயற்கை எண்ணெயான ஸ்குவாலீனைப் பயன்படுத்தி குறைந்த அளவு கொரோனா தடுப்பூசி மருந்தை வைத்து அதிக மக்களை காப்பாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout