கொரோனாவை சாக்காக வைத்து கணினி வைரஸ் பரவல்; WHO எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் மக்களைப் படுத்தும் பாடு போதாது என்று தற்போது கொரோனா பெயரில் கணினி வைரஸ் பரப்பப் பட்டு வருகிறது. இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை இலக்காக வைத்து இந்த கணினி வைரஸ் பரப்பப் பட்டு உள்ளது.

சைபர் குற்றவாளிகள் இணையத்தில் தகவல் திருட்டு போன்ற தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கொரோனா வை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்த தாக்குதல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்தே நடத்தப் பட்டு வருகிறது.

இது குறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் “கொரோனா வைரஸ் அச்சத்தை மூலதனமாக கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் பல மின்னஞ்சல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டு இருக்கின்றன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் மெயில்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது’‘ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த கணினி வைரஸ் மின்னஞ்சலை பார்த்தவுடன் கொரோனா பதட்டத்தால் உடனே திறந்து விடுவோம். இந்த வைரஸை கொண்டு அந்நிறுவனத்தின் பல முக்கியத் தகவல்களும் திருடப்பட்டு இருக்கிறது. மக்களை ஏமாற்றும் விதத்தில் இந்த கணினி வைரஸ் இ-மெயில்கள் ஒரு டஜன் நாடுகளில் பரப்பப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் தகவல்களைத் திருடிக்கொண்டு பணத்திற்காக பிளாக் மெயில் செய்வதும் தொடருகிறது.

தகவல் திருட்டுக்களை செய்வதற்காக URL களை பதிவு செய்து போலி வலைத்தளங்களும் உருவாக்கப் பட்டு இருக்கின்றன. போலி வலைத் தளங்களில் இருந்து கணினி வைரஸ் கொண்ட மின்னஞ்சல்கள் “அவசர செய்தி“ எனக் குறிப்பிட்டு அனுப்பப் பட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. சைபர் குற்றவாளிகள் AFP கணினி வைரஸ்களை கார்ப்பரேட் நிறுவனங்களில் பரப்பவே கொரோனா முகமூடியைக் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இது குறித்து, WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி போலி மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள், இணைய தளங்கள், தொலைபேசி, மொபைல் அழைப்புகள், எஸ்எம்எஸ், பேக்ஸ் போன்றவற்றிற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
 

More News

திருமணத்தை மீறிய கள்ள உறவு: போலீஸ் தற்கொலை, ஆபத்தான நிலையில் பெண்

திருமணத்தை மீறிய கள்ள உறவு காரணமாக கேரளாவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் அவருடைய கள்ளக் காதலியும் தற்கொலை செய்துகொள்ள எடுத்த முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அஜித் சார், எவ்வளவு நாளைக்குத்தான் சும்மா இருப்பீங்க? கஸ்தூரி கேள்வி

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் என்பதும், அவ்வப்போது சமூக கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்துபவர் என்பதும் தெரிந்ததே.

'தடம்' இந்தி ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை

இரட்டை வேடங்களில் அருண்விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்த திரைப்படம் 'தடம்'. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார்.

27ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: விநியோகிஸ்தர்களின் முடிவால் மாஸ்டருக்கு சிக்கலா?

மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று நேற்று நடைபெற்ற விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால்

பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும்ன் 100க்கும் அதிகமான நாடுகளில் பரவி தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது.