கொரோனாவை சாக்காக வைத்து கணினி வைரஸ் பரவல்; WHO எச்சரிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் மக்களைப் படுத்தும் பாடு போதாது என்று தற்போது கொரோனா பெயரில் கணினி வைரஸ் பரப்பப் பட்டு வருகிறது. இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை இலக்காக வைத்து இந்த கணினி வைரஸ் பரப்பப் பட்டு உள்ளது.
சைபர் குற்றவாளிகள் இணையத்தில் தகவல் திருட்டு போன்ற தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கொரோனா வை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்த தாக்குதல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்தே நடத்தப் பட்டு வருகிறது.
இது குறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனமான "செக் பாயிண்ட்" நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் “கொரோனா வைரஸ் அச்சத்தை மூலதனமாக கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் பல மின்னஞ்சல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டு இருக்கின்றன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் மெயில்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது’‘ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த கணினி வைரஸ் மின்னஞ்சலை பார்த்தவுடன் கொரோனா பதட்டத்தால் உடனே திறந்து விடுவோம். இந்த வைரஸை கொண்டு அந்நிறுவனத்தின் பல முக்கியத் தகவல்களும் திருடப்பட்டு இருக்கிறது. மக்களை ஏமாற்றும் விதத்தில் இந்த கணினி வைரஸ் இ-மெயில்கள் ஒரு டஜன் நாடுகளில் பரப்பப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் தகவல்களைத் திருடிக்கொண்டு பணத்திற்காக பிளாக் மெயில் செய்வதும் தொடருகிறது.
தகவல் திருட்டுக்களை செய்வதற்காக URL களை பதிவு செய்து போலி வலைத்தளங்களும் உருவாக்கப் பட்டு இருக்கின்றன. போலி வலைத் தளங்களில் இருந்து கணினி வைரஸ் கொண்ட மின்னஞ்சல்கள் “அவசர செய்தி“ எனக் குறிப்பிட்டு அனுப்பப் பட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. சைபர் குற்றவாளிகள் AFP கணினி வைரஸ்களை கார்ப்பரேட் நிறுவனங்களில் பரப்பவே கொரோனா முகமூடியைக் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இது குறித்து, WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி போலி மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள், இணைய தளங்கள், தொலைபேசி, மொபைல் அழைப்புகள், எஸ்எம்எஸ், பேக்ஸ் போன்றவற்றிற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments