ஆபாசப்படம் பார்த்து சுயஇன்பம் பண்றீங்களா? அச்சுறுத்தும் சைபர் ஹேக்கிங்!
- IndiaGlitz, [Wednesday,August 04 2021]
சமீபகாலமாக மற்றவர்களின் செல்போனையோ அல்லது லேப்டாப்பையோ ஹேக்கிங் செய்து பணம் பறிக்கும் நடவடிக்கை அதிகரித்து விட்டது. இந்நிலையில் ஆபாசப்படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து ஹேக்கிங் செய்யும் Extrotion எனும் செயலி குறித்த அச்சம் அதிகரித்து இருக்கிறது.
இதைத்தவிர பார்ன் சைட்டில் வீடியோ பார்த்து செக்ஸ், சுயஇன்பம் செய்பவர்களின் வீடியோவை பதிவு செய்து அவர்களிடம் பணம்பறிக்கும் முயற்சியும் நடைபெற்று இருக்கிறது. இதனால் செல்போன் அல்லது லேப்டாப்பில் பார்ன் வீடியோவை பார்க்கும்போது உங்களுடைய செயல்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்கு உங்களுடைய முன்பக்க கேமராவைத் டேப் போட்டு ஒட்டிவையுங்கள் என்று சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஹேக்கர்கள் அனுப்பும் பாப் அப் குறுந்தகவலை ஒருபோதும் க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதுபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு தம்பதிகளின் வீட்டு டிவியை ஹேக் செய்த ஹேக்கர்கள் அந்தத் தம்பதிகளின் செக்ஸ் வீடியோவை அவர்கள் தினமும் பார்க்கும் அதே பார்ன் சைட்டில் பதிவிட்ட சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இத்தகைய அச்சுறுத்தும் தகவலையொட்டி உண்மையில் ஹேக்கர்கள் பார்ன் வீடியோ சைட்டுகளை வைத்து என்ன செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு சந்தேகம் முளைக்கிறது. இந்தச் சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் நிபுணர்களின் கருத்துக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.