தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை

தமிழ் சினிமாவின் காமெடி நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருமான நடிகை ஆர்த்தி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தளபதி விஜய் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூறுங்கள் என்று விஜய் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு ஒரே வரியில் பதில் கூறிய நடிகை ஆர்த்தி ’தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை’ என்று கூறினார். ஆர்த்தியின் இந்த பதிலுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்துள்ளது.

மேலும் ’உங்களுக்கு பிடித்த விஜய் பட பாடல் எது? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு ’சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்’ என்ற பாடல்தான் தான் மிகவும் விரும்பும் பாடல் என்று கூறினார். மேலும் தளபதி விஜய்யை முதல் முதலாக எப்போது நீங்கள் பார்த்தீர்கள்? என்ற கேள்விக்கு ’குருவி’ படத்தின் படப்பிடிப்பின்தான் அவரை பார்த்தேன்’ என்று கூறினார்.

அதேபோல் தல அஜித்தை எப்போது முதன் முதலாக பார்த்தீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை ஆர்த்தி ’திருப்பதி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் அவருடன் தான் பணிபுரிந்ததாக நடிகை ஆர்த்தி கூறியிருந்தார். மேலும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நடிகை ஆர்த்தி ’சூப்பர் ஸ்டார் ' ரஜினிகாந்தை தான் மூன்று வயதாக இருக்கும்போதே பார்த்து இருப்பதாகவும் அந்த வயதிலேயே தான் போலியோ விளம்பர படத்தில் நடிக்கும் போது அவரை பார்த்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.