இந்தியாவில் பரவும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பா??
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்புதிய தொற்று நோயால் இதுவரை 50 க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து உள்ளன. மேலும் இத்தொற்று நோய் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் பல காகங்கள் உயிரிழந்தன. டேலி எனப்படும் கல்லூரி வளாகத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிந்த நிலையில் இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை ஆய்விற்கு எடுத்துக் கொண்டது. அந்தப் பரிசோதனையில் காகங்கள் புதிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
H5N8 எனப்படும் பறவைக் காயச்சல் நோயால் பாதிக்கப்பட்ட காகங்கள் பின்னர் மொத்தமாக உயிரிழந்து உள்ளன. இதனால் அந்தக் கல்லூரி வளாகத்தை ஒட்டி சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மனிதர்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா எனக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சில மாதிரிகள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அதை போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனாவின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தூரியில் புதிய வகை பறவைக் காய்ச்சல் மேலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments