close
Choose your channels

பெரிய பட்ஜெட், பெரிய நடிகர் படங்கள் நல்ல படங்கள் அல்ல: எச் வினோத் பேச்சு..!

Saturday, September 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் நல்ல படங்கள் அல்ல என்றும் ஒரு மனிதனை மேம்பட்ட மனிதனாக மாற்றும் முயற்சியில் எடுக்கப்படும் படங்களே நல்ல படங்கள் என்று இயக்குனர் எச் வினோத் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ’துணிவு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எச் வினோத். தற்போது விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69 ’படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் சசிகுமார் நடித்த ’நந்தன்’ படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட எச் வினோத் பேசிய போது ’என்னை பொருத்தவரை ஒரு நல்ல படம் என்றால் அது பெரிய பட்ஜெட் கொண்ட படமோ அல்லது பெரிய நடிகர்கள் நடிக்கும் படமும் அல்ல. பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலிக்கும் படங்களும் நல்ல படங்கள் அல்ல. ஒரு மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதனாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும் படங்களே நல்ல படங்கள். அப்படி ஒரு படம் ’நந்தன்’, அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவாளியுங்கள் என்று பேசி உள்ளார்.

பெரிய நடிகரான விஜய் படத்தை எச் வினோத் இயக்க இருக்கும் நிலையில் அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment