பெரிய பட்ஜெட், பெரிய நடிகர் படங்கள் நல்ல படங்கள் அல்ல: எச் வினோத் பேச்சு..!

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் நல்ல படங்கள் அல்ல என்றும் ஒரு மனிதனை மேம்பட்ட மனிதனாக மாற்றும் முயற்சியில் எடுக்கப்படும் படங்களே நல்ல படங்கள் என்று இயக்குனர் எச் வினோத் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ’துணிவு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எச் வினோத். தற்போது விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69 ’படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் சசிகுமார் நடித்த ’நந்தன்’ படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட எச் வினோத் பேசிய போது ’என்னை பொருத்தவரை ஒரு நல்ல படம் என்றால் அது பெரிய பட்ஜெட் கொண்ட படமோ அல்லது பெரிய நடிகர்கள் நடிக்கும் படமும் அல்ல. பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலிக்கும் படங்களும் நல்ல படங்கள் அல்ல. ஒரு மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதனாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும் படங்களே நல்ல படங்கள். அப்படி ஒரு படம் ’நந்தன்’, அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவாளியுங்கள் என்று பேசி உள்ளார்.

பெரிய நடிகரான விஜய் படத்தை எச் வினோத் இயக்க இருக்கும் நிலையில் அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

போட்டி இல்லை என்பது பெருமை இல்லை.. போட்டி இருந்தால்தான் ஜனநாயகத்திற்கு பெருமை: 'நந்தன்' டிரைலர்

சசிகுமார் நடிப்பில் உருவான 'நந்தன்' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த ட்ரெய்ரில்ர் உள்ள வசனங்கள் அட்டகாசமாக இருப்பதாக ட்ரைலரை பார்த்த

'தளபதி 69' படத்திற்காக விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? இந்தியாவின் நம்பர் ஒன்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ள

நான் மட்டும் ஊஞ்சலில் ஆடியபடி..... ஸ்ரீதேவிக்கு பிறகு சிம்ரன்

நடிகர், கொள்கைவாதி, பிரபலங்களை பேட்டி எடுக்கும் நெறியாளர் என பன்முகம் கொண்ட ராஜேஷ் Home Tour நிகழ்ச்சியில் Indiaglitz நேயர்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள்....

விஜய் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. இவருக்கு பதில் இவர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் இருந்து பிரபல நடிகை விலகி உள்ள நிலையில் அவருக்கு பதில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் செல்பி எடுத்த நடிகை ராதிகா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க...!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் நடிகை ராதிகா விமானத்தில் பயணம் செய்யும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்