எச்.வினோத் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Sunday,July 17 2022]

எச் வினோத் இயக்கிய ’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ‘வலிமை’ மற்றும் ’ஏகே 61’ ஆகிய மூன்று படங்களை இயக்கி உள்ளவர் எச்.வினோத். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’சதுரங்க வேட்டை 2’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவானது என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில ஆண்டுகள் ஆன போதிலும் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எச்.வினோத் கதை வசனத்தில் நிர்மல் குமார் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ’சதுரங்க வேட்டை 2’ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 7 என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

More News

ஸ்ருதிஹாசனின் முதல் மேடை: குட்டிப்பெண்ணாக இருக்கும்போதே அசத்திய வீடியோ வைரல்!

 உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் குட்டிப் பெண்ணாக இருக்கும் போது ஏறிய முதல் மேடை குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ்: 'கே.ஜி.எப்' நடிகையின் வைரல் புகைப்படம்!

'கே.ஜி.எப்'  உள்பட பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்த நடிகை ஒருவர் திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ் கொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று ரம்யா பாண்டியன், இன்று ராஷ்மிகா மந்தனா: செம வைரலாகும் ரெட் ரோஸ் போட்டோஷூட்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு காஸ்டியூமில் பதிவு செய்யப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள்

திரைக்கு வரும் முன்பே HD பிரிண்ட்: மிரட்டும் 'தமிழ் ராக்கர்ஸ்' டிரைலர்

திரைக்கு வரும் பத்து நாட்களுக்கு முன்னரே HD பிரிண்ட்டில் படம் வெளியாகும் என்று சவால் விடும் கதையம்சம் கொண்ட 'தமிழ் ராக்கர்ஸ்' வெப்தொடரின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பிரபலத்தின் படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த