'சம்பவம் தரமா இருக்கு': 'வலிமை' அப்டேட் தந்தாரா எச்.வினோத்?

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தீபாவளி விடுமுறை எடுக்காமல் அஜித் உள்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் வலிமை அப்டேட் தராத போனி கபூரை காணவில்லை என அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் டுவிட்டரில், ‘சம்பவம் தரமாக இருக்கும் கவலைப்பட வேண்டாம் வலிமை’ என்ற டுவிட் எச்.வினோத் பெயரில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் எச்.வினோத் பெயரில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் கணக்கு இல்லை என்பதும், இந்த டுவீட் அவரது பெயரில் உருவாக்கப்பட்ட போலி அக்கவுண்ட் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது