தாமதமாகும் கமல்ஹாசன் படம்.. எச். வினோத் எடுத்த அதிரடி முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் எச் வினோத் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக எச் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அவர் ’புரொஜெக்ட் கே’ படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள உள்ளார்.
அதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. இதனால் கமல்ஹாசன் - எச் வினோத் திரைப்படம் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் ஏற்கனவே தனுஷிடம் கதை கூறி அந்த படத்தை உறுதி செய்திருந்த எச் வினோத் தற்போது தனுஷும் பிஸியாக இருப்பதால் யோகி பாபுவிடம் கதை சொல்லி உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை உடனடியாக அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments