close
Choose your channels

அடுத்த படத்தின் பணியை தொடங்கினார் எச்.வினோத்.. ஹீரோ இவர்தான்..!

Friday, February 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய மூன்று திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ள அடுத்த படம் எது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. எச் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் கமலஹாசன் நடிப்பார் என்றும் தனுஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கமல்ஹாசனை எச் வினோத் சந்தித்ததாகவும் இந்த படத்தின் பணிகளை தொடங்க கமலஹாசன் கூறியதை அடுத்து தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, ஆரம்பகட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எச் வினோத்தின் முந்தைய படங்கள் போலவே வித்தியாசமான மற்றும் சமூகத்தில் நடக்கும் ஒரு பரபரப்பான நிகழ்வுகளின் அடிப்படையில் தான் திரைக்கதை இருக்கும் என்றும் இம்முறை கமலஹாசனின் எச் வினோத் படத்தில் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment