'அஜித் 61' படத்தின் முக்கிய ரகசியத்தை கூறிய எச். வினோத்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கிய ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி வசூலை குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எச்.வினோத் இந்த படம் குறித்த முக்கிய இரகசியத்தை கூறியுள்ளார் .
ஏற்கனவே இந்த படத்தில் அஜீத் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து எச்.வினோத் கூறும்போது ’அஜித் இந்த படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு, ‘அதெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாக அவர்தான் ஹீரோ அவர்தான் வில்லன் என்று கூறியுள்ளார். இயக்குனர் எச் வினோத்தின் இந்த தகவல் அஜித் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், தபு, கவின் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை புயல் ஓயாத நிலையில்
— BILLA Vetri (@BILLAVetri_) February 26, 2022
அடுத்த புயலை கிளப்பி விட்ட #HVinoth ??️??️??️#Valimai | #Ajithkumar?? #AK61https://t.co/zkArgckHxM pic.twitter.com/yZ52KtkzUz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments