ஃபர்ஸ்ட் ஆப் மட்டும் தான் ரசிகர்களுக்கு .. 'துணிவு' பட ரகசியத்தை கூறிய எச்.வினோத்

  • IndiaGlitz, [Saturday,January 07 2023]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் எச் வினோத் அளித்த பேட்டியில் ‘துணிவு’ திரைப்படம் முழுவதும் வங்கி கொள்ளை படம் கிடையாது என்றும் அது படத்தில் ஒரு சிறிய பகுதிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுகாகவே உருவாக்கப்பட்டது, ஆனால் இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும், சிறந்த பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு இந்த படத்தின் முதல் காட்சி திரையிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை: குவியும் வாழ்த்துக்கள்

 டெல்லியில் நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறு கிராமத்தைச் சேர்ந்த மதி ரத்வா என்ற பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தங்கம் வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள்

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த 10 நிமிட பாடல்.. பிரபல நடிகை தகவல்

பொதுவாக ஒரு பாடல் என்றால் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஜிவி பிரகாஷ் ஒரு திரைப்படத்திற்காக 10 நிமிட பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாக

ஏஆர் ரஹ்மானை வாழ்த்த குவிந்த ரசிகர்கள்: மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

'குக் வித் கோமாளி' சீசன் 4: இந்த பிரபலம் கோமாளியா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்பதும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள்

மீரா ஜாஸ்மினா இது? கோல்டன் தேவதையாக மாறிவிட்டாரே...

நடிகை மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 வயதிலும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது திடீரென கோல்ட் கலரில் சேலை அணிந்து