சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் எச்.வினோத்.. தள்ளி போகிறதா கமல் படம்?

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

கமல்ஹாசன் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முன்பு இன்னொரு படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும், கமல் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் இணையும் படம் தள்ளி போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எச் வினோத் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்து இடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

முதல் பாகத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ ’தக்லைப்’ மற்றும் 'கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் தற்போது கமிட்டாகி பிசியாக இருப்பதால் கமல் - எச் வினோத் படம் தள்ளிப் போய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

More News

இந்த வாரம் எவிக்சன் இந்த போட்டியாளரா? ஜஸ்ட் மிஸ் ஆன நிக்சன்..!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நிக்சன் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில்  அவருக்கு பதிலாக வேறொரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய தினேஷ்... என்ன சொன்னார்?

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான தினேஷ் முதல்முறையாக தனது மனைவி ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'ஆலம்பனா'  ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? விளக்க அறிக்கை வெளியீடு..!

வைபவ் நடித்த 'ஆலம்பனா'  என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதியை சந்தித்த அடுத்த காமெடி நடிகர்.. எத்தனை லட்சம் நிவாரண நிதி?

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர்.

அஜர்பைஜானில் அஜித் செய்த தரமான சம்பவம்.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

அஜர்பைஜானில் அஜித் செய்த தரமான சம்பவம் குறித்த புகைப்படங்கள் அவருடைய மேனேஜரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.