கமல் படமும் இல்லை, விஜய் படமும் இல்லை.. இறுதி முடிவெடுத்த எச்.வினோத்..!

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருந்த ’கமல் 233’ திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த படம் ட்ராப் என கூறப்பட்டது . இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் செலவு செய்த எச்.வினோத், பின்னர் வேறொரு படத்தை இயக்குவதற்கான பணிகளை தொடங்கினார்.

இந்த நிலையில் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் ’தளபதி 69’ படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை .

இந்த நிலையில் கமல் படமும் வேண்டாம், விஜய் படமும் வேண்டாம், தனக்காக காத்திருக்கும் தனுஷ் படத்தை இயக்க எச்.வினோத் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக எச்.வினோத் எப்போது வந்தாலும் அவருக்காக தேதி தர தயார் என தனுஷ் கூறியதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் எச்.வினோத் உடன் இணைவார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.