ஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா? கன்னியாகுமரி எம்பி அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியவர் எச்.வசந்தகுமார். ஏற்கனவே எம்.எல்.ஏவாக உள்ள இவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரைவில் எம்பியாக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் பரவில் வரும் ஒரு வதந்திக்கு எச்.வசந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். வங்கிகளில் மக்கள் விவசாய அடிப்படையில் வைத்திருகும் கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக இருப்பதால் அனைவரும் தங்கள் அருகாமையிலுள்ள வசந்த் அன் கோ நிறுவனத்தில் வருகிற 30ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்து சென்று படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதான் வாட்ஸ் அப்பில் பரவி வரும் வதந்தி
இந்த வதந்திக்கு வசந்த் அன் கோ நிறுவனரான எச்.வசந்தகுமார் மறுப்பு தெரிவித்து கூறியதாவது: மேற்கொண்ட செய்தி தற்பொழுது வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இச்செய்தி உண்மையல்ல, பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம். தோல்வியின் விரக்தியில் பாஜகவி'னர் செய்யும் பித்தலாட்ட வேலை. இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
மேற்கொண்ட செய்தி தற்பொழுது #Whatsapp மற்றும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
— Vasanthakumar (@vasanthakumarH) May 25, 2019
இச்செய்தி உண்மையல்ல, பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம்.
தோல்வியின் விரக்தியில் #BJP 'னர் செய்யும் பித்தலாட்ட வேலை. இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. pic.twitter.com/Re7HHxeoh2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout