முதல்வரை கேள்வி கேட்கும் துணிவு உண்டா? கமலுக்கு ஹெச்.ராஜா கேள்வி

  • IndiaGlitz, [Saturday,January 19 2019]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வபோது விமர்சனம் செய்வதும், கமல்ஹாசன் அதற்கு பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேரள அரசு நிறைவேற்றுவதாகவும், அதனால் கேரள அரசை குறைகூற ஒன்றும் இல்லை என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியதாவது:

சபரிமலையை பொருத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமலஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மய்யம் இந்து விரோத அமைப்பே என்று கூறியுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் கமல் ரசிகர்களும் மக்கள் நீதிமய்ய தொண்டர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.