வைரமுத்துவை கைது செய்யுங்கள்: எச்.ராஜா கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கவிஞர் வைரமுத்து பேசியதாகவும், அதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய பாஜக பிரமுகர் எச்.ராஜா, தற்போது மீண்டும் வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
"தமிழாற்றுப்படை" என்கிற பெயரிலே மீண்டும் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயலில் கவிஞர் வைரமுத்து இறங்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எம்பெருமான் ராமனை பைத்தியம் என்பாராம். இவர் செக்ஷன் 84-க்கு கீழே உள்ள தப்பித்து கொள்ளவே இப்படி உளற ஆரம்பித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்டாள் நாச்சியாரை அருவெருக்கத்தக்க வார்த்தைகளால் அர்ச்சித்த குற்றவாளி. தொடர்ந்து குற்றங்களை இழைப்பவர்களுக்கு ஒரு பெயர் உண்டு.. habitual offender..ன்னு
இதற்கு என்ன செக்ஷனில் தண்டனை என்பதை திருமதி நளினி சிதம்பரத்துக்கு கிட்ட இவர் கேட்டு தெரிஞ்சிக்கிறது நல்லது. கிறிஸ்தவ மதமாற்றும் சக்திகளின் கைக்கூலியாக செயல்படும் வைரமுத்து போன்றவர்களை பார்த்து நான் கேட்கிறேன், உங்களுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மத கடவுள்களை பற்றி பேசுவதற்கு முதுகெலும்பு உண்டா? பேச முடியுமா? என்று ஆவேசமாக வைரமுத்துவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
எச்.ராஜா பேசிய இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2/2 pic.twitter.com/4k4YWbjr18
— H Raja (@HRajaBJP) July 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments