உலக நாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதுமா? ஹெச்.ராஜா

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

குடியுரிமை சட்டம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ‘வாக்கு வங்கிக்காக குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு எதிரான போர்’ என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, ‘‘உலக நாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவும் வேண்டும். பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் 11 தெளிவாக சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் இது என்று.

மேலும் இது முதல் தீர்த்தம் அல்ல, இது ஐந்தாவது சட்டத்திருத்தம். இதற்கு முன்னர் நான்கு முறை திருத்தம் ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று முறை காங்கிரஸ் இருக்கும்போது திருத்தப்பட்டது. அந்த நான்கு முறை திருத்தியபோது பாராளுமன்றத்தில் அதிகாரம் இல்லாமல் தான் திருத்தினார்களா? ஆகவே கமலஹாசன் அவர்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியவில்லை சட்டமும் தெரியவில்லை’ இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.