ரஜினிகாந்த் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்: ஹெச்.ராஜா

ரஜினிகாந்த் அவர்கள் எந்த மிரட்டலுக்கும் சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. பெரியார் குறித்தும் முரசொலி குறித்தும் அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதோடு ரஜினிகாந்த் மீது காவல்துறையினர்களிடம் புகாரும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கூறியபோது ’நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் மேலோட்டமாக ஒரே ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது காவல் நிலையத்தில் பொய் பொய் புகார் கொடுத்தால் அது எடுபடாது. இதுபோன்ற ஊழை மிரட்டலுக்கு ரஜினிகாந்த் பயப்பட மாட்டார், அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் குறித்து ஹெச் ராஜா கூறிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.