ரஜினி மகளின் 2வது திருமணம் பெரியாரின் சீர்திருத்தமா? ஹெச்.ராஜா பதில்
- IndiaGlitz, [Monday,January 20 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியபோது ’ரஜினி மகள் இரண்டாவது திருமணம் யாரால் ஆனது என்பதை ரஜினிகாந்த் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், பெரியாரின் சீர்திருத்தம் காரணமாகத்தான் அவருடைய இரண்டாம் மகளின் மறுமணம் ஆனது என்றும் கூறினார்.
எனவே ரஜினிகாந்த் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது என்றும், குருமூர்த்தி சொல்லிக் கொடுத்துதான் ரஜினி இவ்வாறு பேசி இருப்பார் என்றும் ஜெ.அன்பழகன் தெரிவித்தார். எம்.எல்.ஏ அன்பழகனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அன்பழகன் பேச்சு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் ’இந்து பெண்கள் மறுமணம் சட்டம் 1856 இல் வந்தது என்றும் ஆனால் பெரியார் ஈவெரா பிறந்தது 1879 இல் என்றும் அப்படி இருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 - ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 - ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள். https://t.co/I7BxJJctRD
— H Raja (@HRajaBJP) January 19, 2020