அரசியல் குறித்து கருத்து சொல்ல தகுதியற்றவர் கமல்ஹாசன்: ஹெச்.ராஜா

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தலைவர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியலை திமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் குறித்து இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, 'கமல்ஹாசன் பரத நாட்டியம் குறித்து வேண்டுமானால் கருத்து சொல்லலாம் ஆனால் அரசியல் குறித்து கருத்து சொல்ல தகுதியற்றவர்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பெரியார் சிலை விவகாரம் குறித்து கமல்ஹாசன், ஹெச்.ராஜா ஆகிய இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் விமர்னம் செய்திருக்கும் நிலையில் ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் என்ன பதில் கூறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்