பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்!
- IndiaGlitz, [Saturday,September 26 2020]
பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாஜகவின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகளின் பட்டியல் சற்று முன் வெளியானது. இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்பதும், ஏற்கனவே தேசிய செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஹெச். ராஜா அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து தமிழக பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பட்டியலில் ஹெச். ராஜாவின் பெயர் இருந்தது. ஆனால் எல். முருகன் திடீரென தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்த ஹெச்.ராஜாவின் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் பெற்று ஹெச்.ராஜா தனது சமூகவலைத்தளத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியல் குறித்து கூறியபோது ’தேசிய தலைவர் திரு.J.P.நட்டா ஜி தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹெச். ராஜாவுக்கு வேறு புதிய பதவி வழங்கப்படுமா? அல்லது அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தேசிய தலைவர் திரு.J.P.நட்டா ஜி தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
— H Raja (@HRajaBJP) September 26, 2020
श्री जे.पी. नट्टा जी के नेतृत्व में सभी नव नियुक्त राष्ट्रीय कार्यकारी अधिकारियों को बधाई। @narendramodi @AmitShah @JPNadda @BJP4India