பிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்? ஹெச்.ராஜா புதுவிளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசும்போது வரும் ஞாயிறு அன்று அனைவரும் இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார்
பிரதமரின் இந்த வேண்டுகோளை பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இது இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் எம்பி டி.ஆர்.ரங்கராஜன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து கூறியதாவது:
நோய்நொடிகள் வெம்புலி போல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டு பிள்ளை –என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
என்று பாடினார் ஜீவா ...
இன்றும் மக்களின் நிலைமை இப்படியே இருக்க,
கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என விதவிதமாய் அறிவிப்புகள்.
நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர்! என்று கூறியிருந்தார்.
ரங்கராஜன் எம்பி அவர்களின் இந்த கருத்துக்கு பதில் கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைவர் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவாரிடம் சங்கத்தை அரசு தடை செய்தால் என்ன செய்வீர்கள் என்ற போது அவர் சொன்னார். ஒன்றும் செய்ய மாட்டோம். ஷாகா நேரத்தில் அது நடைபெறும் இடத்தில் ஒருமணி நேரம் படுத்திருப்போம் என்றார். உடல் மட்டுமே படுத்திருக்கும், உள்ளம் சங்கப் பணி பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும். அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே. ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படைவாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது. என்ன செய்ய தங்களுக்கு வாய்த்த கொள்கை அப்படி. வணக்கம்’ என்று கூறியுள்ளார். வழக்கம்போல் இந்த இரண்டு கருத்துக்கும் நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களில் புகுந்து விளையாடி வருகின்றனர்.,
ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவாரிடம் சங்கத்தை அரசு தடை செய்தால் என்ன செய்வீர்கள் என்ற போது அவர் சொன்னார்.ஒன்றும் செய்ய மாட்டோம். ஷாகா நேரத்தில் அது நடைபெறும் இடத்தில் ஒருமணி நேரம் படுத்திருப்போம் என்றார். உடல் மட்டுமே படுத்திருக்கும், உள்ளம் சங்கப் பணி பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் https://t.co/NqIE6Lxepo
— H Raja (@HRajaBJP) April 3, 2020
அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே. ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படை வாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது. என்ன செய்ய தங்களுக்கு வாய்த்த கொள்கை அப்படி. வணக்கம் https://t.co/NqIE6Lxepo
— H Raja (@HRajaBJP) April 3, 2020
வருகின்ற ஏப்ரல் 5 ஞாயிற்றுக் கிழமை இரவு 9.00மணிக்கு மக்கள் தங்கள் வீட்டு விளக்குகளை அணைத்து விட்டு வீட்டு வாசலில் தீபம், மெழுகுவர்த்தி,டார்ச் லைட் அல்லது செல் ஹெட்லைட் மூலம் அவரவர் வீட்டு வாசலில் அல்லது பால்கனியில் 9 நிமிடங்கள் ஒளியேற்றிட பிரதமர் கேட்டுக் கொண்டுள். @narendramodi pic.twitter.com/un7hiYxYmf
— H Raja (@HRajaBJP) April 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout