சினிமாவை நிறுத்துவது தான் உளவுத்துறையின் வேலையா? எச்.ராஜா கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான திரைப்படத்தை திரையிடக் கூடாது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இதற்கு பாஜக பிரமுகர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பகத் பாசில் நடித்த மலையாளப் படமான ’டிரான்ஸ்’ என்ற திரைப்படம் தமிழில் ’நிலை மறந்தவன்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் கவுதம் மேனன், நஸ்ரியா நசிம் உள்பட பலர் நடித்துள்ளனர். மதத்தை வைத்து வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் போலி பாதிரியார்கள் மற்றும் அவர்கள் செய்யும் சூழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை இந்த படத்தின் கதை உரித்து காட்டுகிறது.
இந்த நிலையில் ’நிலை மறந்தவன்’ திரைப்படத்தை கன்னியாகுமரி பகுதியில் திரையிட வேண்டாம் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.
இது குறித்து பாஜக பிரமுகர் எச். ராஜா கூறியபோது, ‘நிலை மறந்தவன்’ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உளவுத்துறை அதிகாரி ஒருவர் போன் செய்து மிரட்டி உள்ளது கண்டனத்துக்குரியது என்றும், கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் இந்த படத்தை திரையிடக்கூடாது என போலீஸ் மூலம் மிரட்டல் விடப்படுகிறது என்றும், உளவுத்துறை அதிகாரிகள் அவர்கள் வேலையை மட்டும் செய்யட்டும் என்றும், சினிமாவை நிறுத்துவதுதான் உளவுத்துறையின் வேலையா? என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout