சினிமாவை நிறுத்துவது தான் உளவுத்துறையின் வேலையா? எச்.ராஜா கண்டனம்

  • IndiaGlitz, [Sunday,July 17 2022]

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை திரையிடக் கூடாது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இதற்கு பாஜக பிரமுகர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பகத் பாசில் நடித்த மலையாளப் படமான ’டிரான்ஸ்’ என்ற திரைப்படம் தமிழில் ’நிலை மறந்தவன்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் கவுதம் மேனன், நஸ்ரியா நசிம் உள்பட பலர் நடித்துள்ளனர். மதத்தை வைத்து வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் போலி பாதிரியார்கள் மற்றும் அவர்கள் செய்யும் சூழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை இந்த படத்தின் கதை உரித்து காட்டுகிறது.

இந்த நிலையில் ’நிலை மறந்தவன்’ திரைப்படத்தை கன்னியாகுமரி பகுதியில் திரையிட வேண்டாம் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இது குறித்து பாஜக பிரமுகர் எச். ராஜா கூறியபோது, ‘நிலை மறந்தவன்’ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உளவுத்துறை அதிகாரி ஒருவர் போன் செய்து மிரட்டி உள்ளது கண்டனத்துக்குரியது என்றும், கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் இந்த படத்தை திரையிடக்கூடாது என போலீஸ் மூலம் மிரட்டல் விடப்படுகிறது என்றும், உளவுத்துறை அதிகாரிகள் அவர்கள் வேலையை மட்டும் செய்யட்டும் என்றும், சினிமாவை நிறுத்துவதுதான் உளவுத்துறையின் வேலையா? என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஜெய்-அதுல்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பல பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ஜெய், அதுல்யா ரவி நடித்த திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஏ.எல்.விஜய் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சி: திரையுலகினர் இரங்கல்

இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தாயாரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஏ.எல்.அழகப்பன் அவர்களின் மனைவியுமான வள்ளியம்மை என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? கசிந்த புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றது போலவே மூன்றாவது சீசனும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'இரவின் நிழல்' முதல் நான்லீனியர் படம் இல்லையா? புளுசட்டை மாறனுக்கு பார்த்திபன் பதிலடி!

பார்த்திபன் நடித்த 'இரவின் நிழல்' திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்  'இரவின் நிழல்' திரைப்படம்

300க்கு 300 மதிப்பெண் எடுத்தும் மீண்டும் தேர்வு எழுத முடிவு செய்த மாணவர்: ஆச்சரிய தகவல்

சமீபத்தில் ஜே.ஈ.ஈ. மெயின் தேர்வு ரிசல்ட் வந்த நிலையில் இந்த தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நவ்யா ஹிசாரியா என்பவர் 300க்கு 300 மதிப்பெண் எடுத்து 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார்.