கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் கிடையாது: எச்.ராஜா

  • IndiaGlitz, [Wednesday,November 08 2017]

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அவரே நேற்றைய பிறந்த நாளில் அறிவித்துவிட்டார். நேற்று மக்களுடன் தொடர்பு கொள்ள 'மையம் விசில்' என்ற செயலியை அறிமுகம் செய்த கமல், வரும் ஜனவரி முதல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வரும் என்று கூறினார்

கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல் அரசியல் வருகை குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 'கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். இருப்பினும் சினிமாவைத் தவிர்த்து கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் கிடையாது என்பதால் அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். 

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒரு ரசிகர், 'அரசியலில் பல ஆண்டுகள் இருக்கும் தங்களுக்கு எத்தனை கிலோ, அல்லது கிராம் அரசியல் ஞானம் உள்ளது ஐயா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.