65 வயது வரை பணம் சம்பாதித்த பால்கனி பையன்: கமல்ஹாசனை கலாய்த்த எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை ‘பால்கனி அரசு’ என விமர்சனம் செய்தார். பால்கனியில் உள்ள அனைவரும் தரையில் உள்ளவர்களை கவனிப்பது இல்லை. முதலில் டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது வெடிகுண்டு மாதிரி. அது கொரோனாவை விட பெரிய ஆபத்தானது. அந்த நெருக்கடி விபரீதமாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 4 நாட்கள் கழித்து இந்த விமர்சனத்திற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
பால்கனி அரசு? இந்த அரசு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு பால்கனி பையன், தனது 65 ஆண்டு வரை பிஸியாக பணம் சம்பாதித்துவிட்டு தற்போது திடீரென ஏழை மக்களுக்காக ரூ.1.7 லட்சம் கோடி வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டுகிறார். வெட்கம்’ என்று கூறியுள்ளார்.
Balcony government? This govt has come to power with 2/3 majority with the support of grassroot level downtrodden people. But a Balcony boy who spent his 65 years busy making money is blabbering today against a govt which with one stroke has given 1.7 lac crores to poor. Shsme https://t.co/AUbzyviBF9
— H Raja (@HRajaBJP) April 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout