மும்தாஜ்-சிவாஜி நடனம் ஆடுவது போல் படம் எடுக்கலாமா? கமலுக்கு எச்.ராஜா கேள்வி
- IndiaGlitz, [Tuesday,November 21 2017]
நடிகை தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாக கூறி ஒருசில அமைப்புகள் அந்த படத்திற்கு எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. ஒருசிலர் எல்லை மீறி தீபிகாவின் தலைக்கு விலையும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் 'பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும். இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும். இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கருத்தை பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். சரித்திர நிகழ்வுகளை கொச்சைபடுத்தி படம் எடுத்ததை ஆதரித்து பேசிய கமலஹாசனின் செயல் கண்டிக்கத்தக்கது. சரித்திர நிகழ்வுகளை கேலி செய்வதற்கு கமலஹாசன் போன்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை
அவரவர் விருப்பத்துக்கு படம் எடுக்கலாம் என்றால் மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்கலாமா என்று கமல்ஹாசனுக்கு ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். இதற்கு கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்