மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இருக்கின்றதா? எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் டெல்டா பகுதியை தாக்கிய கஜா புயலை விட அதனால் ஏற்பட்ட அரசியல் புயலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வாரங்களாக கஜா புயலை வைத்து அரசியல் செய்வதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று அளித்த பேட்டியின்போது, 'கஜா புயல் தாக்கிய 6 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார். ஆனால் புயல் பாதித்த பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு பிறகு சென்ற கமல் மத்திய அரசை விமர்சிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளுக்கு 12 நாட்கள் கழித்து கமல் சென்றது இரண்டாவது முறை என்பதும் அவர் கடந்த 21ஆம் தேதியே முதல்கட்டமாக டெல்டா பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவியும் ஆறுதலும் கூறியுள்ளார் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments