'நான் ஈ' புகழ் நானி கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ்?

  • IndiaGlitz, [Monday,October 26 2015]

'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' வெற்றி படங்களை அடுத்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தற்போது 'புரூஸ்லீ' என்ற படத்தில் பிசியாக உள்ளார். க்ரித்தி கார்பாந்தா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் 'நான் ஈ' புகழ் நானி, லாவண்யா திரிபாதி நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற Bhale Bhale Magadivoy என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தின் நானி கேரக்டர் ஜி.வி.பிரகாஷூக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷின் முதல் படமான 'டார்லிங்' படமும் தெலுங்கில் வெற்றி பெற்ற 'பிரேம கத சித்ரம்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.