பாரீஸில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ' படப்பிடிப்பு ஆரம்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் வெற்றி பெற்று வருகிறார். அவர் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில் இசையமைக்க மட்டுமின்றி அவருக்கு நடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'புரூஸ்லீ' படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை பாரீஸ் கார்னர் அருகே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பாண்டியராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பானந்தா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், பாலசரவணன், மன்சூர் அலிகான் உள்பட மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையும் அமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments