close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'கிக்' நாயகி திடீர் மாற்றம்

Sunday, May 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'கடவுள் இருக்குறான் குமாரு" என்ற கிக் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது அவிகா கோர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 'கயல்' ஆனந்தி ஒப்பந்தமாகியிருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே ஆனந்தி, ஜி.வி.பிரகாஷூடன் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பிராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரோபோ சங்கர், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment