ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களிடம் ஜி.வி.பிரகாஷ் வைத்த கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் அனிதா பிரச்சனை வரை பல சமூக பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. தமிழ்ப்பற்றும், தமிழர்கள் மீது அக்கறையும் உள்ள ஜி.வி.பிரகாஷின் சமூக பணிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அவர் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை பெற உதவி செய்யும்னாறு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது
உலகில் உள்ள 1772 மொழிகளில் 7 மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனால் இந்த ஏழில் ஒன்றான தமிழ் மொழிக்கு மட்டுமே ஹார்வர்ட் பல்கலையில் இருக்கை இல்லை. மீதியுள்ள ஆறு செம்மொழிகளுக்கும் இருக்கை உள்ளது. எனவே தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை பெற உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அந்த முயற்சியின் ஒரு சிறுபங்கு தான் ஜி.வி.பிரகாஷ் செய்து வரும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழிக்கு இருக்கை பெற ரூ.60 கோடி தேவைப்படும் நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடம் நிதி பெறப்பட்டு வருகிறது. ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய பங்காக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதமே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout