குமரி மீனவர்களுக்காக கொடை வள்ளலாக மாறிய ஜி.வி.பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக அந்த பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணங்கள் அறிவித்திருந்தபோதிலும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவியை அந்த பகுதி மக்களுக்கு செய்து வருகின்றனர்
அந்த வகையில் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களும் சமீபத்தில் குமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
அதன்படி குமரி மாவட்ட மக்களுக்காக அவர் ஆரம்பித்த இணணயதளத்தில் நன்கொடைகள் குவிந்தன. முதல்கட்ட நன்கொடையில் கிடைத்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், இன்னும் அதிக உதவிகள் அந்த பகுதி மக்களுக்கு தேவைப்படுவதால் நல்ல உள்ளம் கொண்டவர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்து மக்களுக்காக கொடை வள்ளலாக மாறிய ஜி.வி.பிரகாஷூக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் குவிந்து வருகிறது.
We would like to thank you all for the generous contributions in cash and kind for the cyclone affected victims of Kanyakumari.There arestill many more families in need and we look forward to your continued support for the affected people https://t.co/4tKsVUXoPi keep sharing ❤️ pic.twitter.com/TlTuYdNnLu
— G.V.Prakash Kumar (@gvprakash) December 21, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com