விஜய்யின் 'பைரவா'வுக்குத்தான் முதலிடம். ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Tuesday,January 03 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படமும், ஜி.வி.பிரகாஷ் நடித்த 'புரூஸ் லீ' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷ், 'அண்ணாவோட வர்றோம்' என்று விளம்பரப்படுத்தி விஜய் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர் ஒருவர் 'பொங்கல் திருநாளில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள்' என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஜி.வி.பிரகாஷ், விஜய்யின் பைரவா' படத்தை தான் முதலில் பார்ப்பேன். அதன் பின்னரே நான் நடித்த 'புரூஸ் லீ' படத்தை பார்ப்பேன்' என்று கூறியுள்ளார்.
இந்த பதில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் ஜெயலலிதா திரைப்படம்

ஆறு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல முன்னேற்றமான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா...

நாளை முதல் 'விஐபி' டீமில் இணையும் 'தொண்டன்' சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி தயாரித்து இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர்...

பொதுச்செயலாளர் பதவியேற்ற சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

அதிமுக பொதுச்செயலாளராக சமீபத்தில் பதவியேற்ற சசிகலாவுக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா...

குப்பைக்கு சென்ற ஜெயலலிதா படம் போட்ட காலண்டர். அதிமுக தொண்டர்கள் வேதனை

ஜெயலலிதா இருந்தவரை புரட்சி தலைவி, அம்மா, கண்கண்ட தெய்வம் என்று போற்றி வந்த பெரும்பாலான...

பொங்கலுக்கு முன் மீண்டும் ஒரு புயல். சென்னை தாங்குமா?

கடந்த மாதம் 12ஆம் தேதி வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை உள்பட மூன்று மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது...