தடையை தவிடுபொடியாக்கி நாளை வெளியாகிறது 'கடவுள் இருக்கான் குமாரு'

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்த 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படத்தின் ரிலீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாளை திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகவுள்ளது.
'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தை சேலம் பகுதியில் வெளியிடும் ஜி.சிவா என்பவர் தனக்கு தர வேண்டிய பாக்கி பணத்திற்காக இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும், இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை அடுத்து இந்த படம் திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் வெளியாவது உறுதி என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்,.

More News

கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய பிரபல நடிகரின் தந்தை காலமானார்

கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர் ...

பிரதமரின் அறிவிப்பை அன்றே சொன்ன ரஜினி படம்

கருப்புப்பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.500, ரூ,1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை இன்று ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல நடிகர் தனுஷ் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமரின் அறிவிப்புக்கு தலைவணங்குகிறேன். ரஜினிகாந்த்

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு முதல் .500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

நா.முத்துகுமார் மகனுக்கு மரியாதை செலுத்திய 'தேவி' படக்குழுவினர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது...